Beloved Mother Nature
Covid-19...


இயற்கை அன்னை,

இவள், எவரையும் நம்பி இனி பயனில்லை என்றேதான் கொரோனாவை கொண்டுவந்தாளோ...? 

இன்று அவள் சுதந்திரமாய், சுத்தமான காற்றை சுவாசித்திருப்பாள்தான்... !


கூண்டில் அடைபட்ட, 

பறவைகளும், மிருகங்களும் இன்று எம்மைப்பார்த்து எகத்தாளமாய் சிரித்திருக்குமோ...? 

உணர்ந்தாயா மானிடா 

எங்களின் வலிதன்னையே 

என்றே வினவியிருக்கும்தான்.... !


சிற்றெறும்பு முதல் சிங்கம் வரை, 

சிட்டுக்குருவி முதல் சிங்கம் வரை 

யானை முதல் பூனை வரை, 

நாய் முதல் நரி வரை 

சுதந்திரமாய் நடை போட, 

ஆண்டவனையும் மிஞ்சியவன் நான், 

என்றே ஆணவம் கொண்ட மானிடனோ, 

இன்று அடங்கி ஒடுங்கி, 

ஐம்பதடி அங்குல வீட்டுக்குள் 

அமைதியாய்..., 

உறவுகளோடுதான் என்றாலும்

சிறைக்கைதியாய் !

விஞ்ஞானமும், மெஞ்ஞானமும் 

இதையன்றி வேறு செய்வதென்ன  என்றே அறியாதே, 

இன்று நிர்கதியாய்... !


இயற்கையே நீ தந்திடும் 

புயலும், பூகம்பமும், 

பேரிடரும், பெருந்துன்பமும், 

மழையோடு கூடிய பெருவெள்ளமும், 

 நீ மானிடருக்கு 

வைத்திடும் பரிட்சையோ...? 

ஆணவமும், அகம்பாவமும், 

ஜாதிகளும், மதபேத தீண்டாமைகளும், 

தலைக்கணமும், தன்னலம் கொண்ட 

வாழ்வியல்தன்னையும்தான், மறந்தே, மறுத்தே, வாழ்கின்றோமா என்றே மறைமுகமாக பரிசோதித்துதான் பார்க்கின்றாயோ....? 


இயற்கை அன்னையே, 

உன்னிடம் ஓர் உண்மையினை உரைக்கட்டுமா..? 

எங்கும், எப்போதும், தோற்பதும், ஜெயிப்பதும்,  பரீட்சைக்கு உட்படுத்தபடுபவர்கள்தான். 

ஆனால்,நீ வைக்கும் சோதனையில் மட்டும் என்றும் தோற்று நிற்பது நீ மட்டுமே... !


ஆம், ஒவ்வொரு துயரிலும்  விழித்துக்கொள்ளும் எங்களின் 

பொதுநலமும், மனித நேயமும்,  

துன்பம் தணிந்த பின்னே மீண்டும் முடங்கிக்கொள்ளும்.ஓர் ஓரமாய் !


இதில் எங்கள் தவறும் அதிகம் இல்லைதான், 

சுயநலம் என்பதினை 

பிறந்த நொடி முதல்,

தன்பசித்தீர தாயின் மாரோடு 

ஒடுங்கிடவே தந்திட்ட அழுகையிலேயே 

ஆரம்பிக்க கற்றுத்தந்ததும் நீதானே... !

வீண்பழி உன்மீது சுமத்துகிறேன் 

என்றும் எண்ணிட வேண்டாம்  , 

பழக்கதோஷம்தன்னை அத்தனை 

எளிதில் மாற்றிக்கொள்ள இயலவில்லை, என்றேதான் சொல்லவந்தேன் !


ஆகவேதான், 

தவறியே பல பிழைகள் 

மீண்டும், மீண்டும் தொடர்கிறோம், 

உனக்கு தீரா பல தொல்லைகளும் 

தருகிறோம். 

எனினும் நீ என்றும், 

எங்களின் துணைவர 

மறுத்தவளில்லை, மறந்தவளில்லை, 

சும்மாவா, என்னதான் இருந்தாலும்

எங்களின் அன்னையல்லவா நீ... !!!

*******

நன்றிகளுடன்
ENGLISH TRANSLATION


Wonder if Mother Nature has fetched this deadly corona virus to earth after being tired of trusting the unreliable human race!

Probably these days she's inhaling the purest of air independently after a while in peace..  The caged animals and birds seem to be questioning us we if have finally realised the agony that they go through with a mocking smile!  From the mighty Elephant to the tiny ant The Powerful Lion to the little sparrow The Cunning fox to the guarding Dog are all  exploring the enchanting Earth freely,  But the arrogant human race who compare themselves with their creator are locked inside their homes, Although with their loving families yet like prisoners..  And the science & Technology that they boast about and the spiritual Wisdom that they rely on, nothing seems to be having an answer except being locked inside...  Mother Nature, are you putting us to the test by bringing in earthquakes and the disastrous floods, the storms and cyclones and the misery and suffering that come along with them?  Are you indirectly examining us to check if we have actually forgotten to live the way life is lived with heaps of hatred, violence, pride, selfishness, religious and caste differences around the globe?  My beloved mother nature, let me tell you a true yet sad fact, Though we are the one's who go through your test, you are one who always fail!  Yes indeed, our selfless deeds and humanity that wakes up out of the blue from nowhere during a tragedy, fades away in no time when things get better,  To be honest it's not solely our fault,  Since, you are the one who taught us to be selfish at the very moment when we were born to cry for mother's milk in order to satiate our hunger! Not blaming you, just trying to say that we are not able to get rid of that habit till now!  Hence, we keep on committing mistakes after mistakes unintentionally that affects you adversely , But still you neither forgot us nor failed to protect us,

After all, you are our beloved Mother!- ANANTHI. RN, Tamil Lyricist and Poet.

 Support Independent Journalism

  • LinkedIn
  • Instagram
  • Twitter
  • Facebook

Support

Independent Journalism

© The Colourboard 2020. All Rights Reserved

Screen Shot 2020-11-22 at 12.24.18 PM.pn